Thursday, April 19, 2018
Monday, April 16, 2018
kavingar jawaharlal kavithaigal: https://soundcloud.com/kavingar-jawaharlal/zb3mugw...
kavingar jawaharlal kavithaigal: https://soundcloud.com/kavingar-jawaharlal/zb3mugw...: https://soundcloud.com/kavingar-jawaharlal/zb3mugwszagq
Thursday, April 12, 2018
மறந்தா போனார்
?
காற்றினி
லாடி, உள்ளக்
களிப்பதை நாடிக், காதற்
பேற்றினில்
மூழ்கிக், கொம்பைப்
பிணைத்துமே பின்னி வாழும்
போற்றிடு
தன்மை யுள்ள
பூநிறை மல்லி கையே !
நேற்றெனை
அணைத்தா ரின்று
நினைப்பதை மறந்தா போனார் ?
சேர்த்தெனை
யணைத்துக் கன்னம்
சிவந்திட ஈயும் போது
பார்த்ததைக்
கீச்கீச் சென்று
பழித்துமே பறந்து பேட்டைச்
சேர்த்தெமைச்
சுற்றி வந்து
திரிந்தபூஞ் சிட்டே ! நேற்றுக்
கோர்த்தகை
பிணைத்தா ரிந்தக்
குமரியை மறந்தா போனார் ?
இடையினைத்
தடவி அய்யோ
எங்கேயுன் இடையென் றென்றன்
இடையினைத்
தேடு வார்போல்
என்னவோ செய்யும் போழ்தில்
தடைசெய
வந்தாய் போலச்
சரக்கென முறைத்துச் சோலை
இடையினிற்
பாய்ந்த மானே !
எனையவர் மறந்தா போனார் ?
இடைவெளி
குறுகி நாங்கள்
இருவரொன் றாகி எங்கள்
இடையினில்
எதுவும் போக
இடமிலா திருக்க அந்த
இடைவெளி
தனிலும் மிக்க
இடரொடு நுழைந்த காற்றே !
இடையிலே
நாளொன் றுக்குள்
இதையவர் மறந்தா போனார்?
27-03-1960
Thursday, November 23, 2017
யாருமில்லா மேடையில்
யாருமில்லா மேடையில்
யாரு
மில்லா மேடையி லேநான்
நாட்டிய மாடுகின்றேன்; -- கேட்க
யாரு
மில்லா அவையினி லேநான்
பாடல் பாடுகின்றேன்.
மலரின்
அசைவை அதுதரும் மணத்தை
நுகர வாருமென்றேன்; -- அந்த
மலரே
வாடி உதிர்ந்திடு வரையில்
மனிதர் நெருங்கவில்லை.
தென்னையின்
கீற்றுச் சலசலப் பொலியின்
தேனிசை கேளுமென்றேன்; -- அங்கே
தென்னையின்
அடியில் நிற்பவர் கூடச்
சலசலப் புணரவில்லை.
சாதிக
ளெழுப்பும் சச்சர வொலியின்
சத்தம் அடக்குமென்றேன்; -- அந்தச்
சாதிகள்
இரைச்சல் இன்னிசை யெனவே
சுவைத்தலை யேகண்டேன்.
ஊழல்
எனவொரு புற்றுநோய் நாட்டை
உருக்குலைக் குதென்றேன்நான்; -- அந்த
ஊழலில்
குளித்தே திளைப்பவர் என்குரல்
உதறிடல் கண்டுநொந்தேன்.
யாரு
மில்லா மேடையி லாடும்
நாட்டியம் என்னபயன் ? – கேட்க
யாரு
மில்லா அவையினி லேஎன்
பாடலால் என்னபயன் ?
தினமணி—கவிதைமணி—21-11-17
Friday, October 27, 2017
Wednesday, September 20, 2017
புதுமைப் பெண்
புதுமைப் பெண்
புதுமைப்பெண்
பேசுகின்றேன்: இங்கே நீங்கள்
பணித்திட்ட துணிச்சலொடு வாய்தி றப்பேன்;
புதுமைப்பெண்
என்றென்னைச் சொல்ல மாட்டேன்;
புதிதென்ன வாழ்கிறதாம் எம்மி டத்தில்.
புதுமையென
வேறெதையும் சொல்லற் கில்லை;
பணிபுரிதல் புதுமையெனச் சொலலாம்; ஆனால்
எதுவரைக்கும்
எம்முள்ளம் நொறுங்கு தென்ற
எல்லையினை நினைத்தாரும் பார்ப்ப தில்லை.
பேருந்தில்
நுழைந்திடவோ முடிவ தில்லை;
பெரியநெருக் கடிதன்னைப் பயன்ப டுத்திப்
பேருந்தில்
உடலூரும் பூச்சி தன்னைப்
பொசுக்கிடவோ நெற்றிக்கண் நூறு தேவை.
பேருந்தை
விட்டிறங்கித்
தலையைப் பார்த்தால்
பிசாசைப்போல் தெரிகிறது; மறுப டிக்கும்
சீருடனே
தலைவாரிப் பொட்டு வைத்துத்
தினம்பணியைத் தொடருகிறோம்; வேறென் செய்ய?
இருவருமே
பணிசெய்து பொருளீட் டித்தான்
இல்லறத்தை உருட்டுகிறோம்; காலை சென்று
இருவருமே
மாலையில்தான் திரும்பு கின்றோம்;
இதயமுள்ள ஆடவர்காள்! கொஞ்சம் இங்கே
கருதுங்கள்;
களைத்தவுடல் இருவ ருக்கும்;
கால்கைகள் ஓய்வெடுக்கக் கெஞ்சும்; ஆனால்
உருக்கமுள்ள
மணவாளன் சோர்வாய்ச் சாய
ஓடியாடி வீட்டினிலும் உழைப்ப வள்நான்.
கடுக்குங்கால் பிடித்துவிட
எம்மை நீங்கள்
கூப்பிடுதல் தவறில்லை; ஆனால் கால்கை
கடுப்பதுவும்
களைப்பதுவும் இருவ ருக்கும்
கருதுங்கால் பொதுதானே; என்றே னும்நீர்
ஒடிக்கின்ற
இடுப்புவலி தீரச் சூடாய்
ஒத்தடங்கள் தருவதற்கு நினைத்த துண்டா?
துடிப்போடு
சிலசமயம் வருவீர்; ஆனால்
தொல்லையெலாம் அங்கேதான் பிரச விக்கும்.
டால்மியாபுரம் – 08-09-1985
எழுப்ப வேண்டாம்
எழுப்ப வேண்டாம்
துன்பங்கள் குறையவில்லை;
நாட்டி லுள்ள
துயரங்கள் குறையவில்லை; நலிவோர் கண்ணில்
இன்பங்கள் தெரிவதில்லை;
ஆள்வ தற்கு
யார்யாரோ வருகின்றார்; அவர்க்கு மட்டும்
இன்பங்கள் கூரைகளைப்
பிய்த்துக் கொண்டே
எப்படியோ சொரிகிறது; நாளு மிந்தத்
துன்பத்தைக் காணாமல்
ஏழை மக்கள்
தூங்கட்டும் அவர்களைநாம் எழுப்ப வேண்டாம்.
ஆட்சியாளர் மிகச்சிறந்த
கெட்டிக் காரர்;
அன்றாடம் சாகின்ற ஏழை மக்கள்
காட்சியிலே நன்மைகளைக்
காட்டல் இந்தக்
காலத்தில் நடப்பதில்லை எனத்தெ ரிந்தே
ஆட்சியினை ஆராய்ந்து
பார்க்கா வண்ணம்
அன்றாடம் மயக்கங்கள் கூட்டு கின்ற
மாட்சிகளைத் திறந்துவிட்டார்;
மக்க ளெல்லாம்
மயக்கத்தில் கிடக்கின்றார்; எழுப்ப வேண்டாம்.
ஆண்டவனைக் கேட்டுக்கேட்
டயர்ந்து போனார்;
ஆள்பவனைக் கும்பிட்டுத் தளர்ந்து போனார்;
பூண்டதொரு வறுமையிந்தப்
பிறவி தன்னிற்
போகாது; கண்முன்னே சுகத்தில் நீந்தும்
ஆண்டவர்கள் ஆடுகின்ற
ஆட்டம் இங்கே
அணுவளவும் குறையாதென் றுணர்ந்து நொந்து
மாண்டுவிட மனமின்றி
ஏதோ ஒன்றின்
மயக்கத்தில் மூழ்குகின்றார்; எழுப்ப வேண்டாம்.
எதிலேனும் மயங்கட்டும்
தமிழர்; சொந்த
இதயத்தை மயக்கத்தில் இழந்து விட்டே
எதையேனும் செய்கின்ற
மாந்தர் கூட்டம்
எதைச்செயவும் மாட்டாமல் மயங்கல் நன்றே.
இதயமென ஒன்றுளதே
அதனை விற்றே
இரக்கமென ஒன்றுளதே அதைய ழித்தே
எதையேனும் செய்துவிட்டுத்
திணறும் மக்கள்
இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.
எழுந்துவந்தால்
எதையேனும் தப்பாய்ச் செய்வார்;
இருக்கின்ற மற்றவர்கள் அதனால் சாவார்.
விழுந்துவிட்ட
தறியாமல், நாட்டில் தீமை
விளைந்துவிட்ட தறியாமல், ஊழ லெங்கும்
அழுந்திவிட்ட தறியாமல்,
வாக்குச் சீட்டை
அளிக்குமுறை யறியாமல் கிடக்கும் மக்கள்
எழுந்துவந்து தவறுகளைப்
புதுப்பிக் காமல்
இருக்கட்டும் மயக்கத்தில்; எழுப்ப வேண்டாம்.
மயக்கங்கள் நீங்காத
வரைக்கு மிந்த
மாநிலத்தில் நல்லதுதான்; எழை மக்கள்
மயக்கங்கள் நீங்கியிங்கே
கொதித்தெ ழுந்தால்
மடமடெனக் கொடுமையெலாம் சரிந்தி டாதா?
மயக்குங்கள் அதனால்தான்
திறந்து விட்டார்;
மயக்கத்தில் மக்களினை ஆழ்த்தி விட்டால்
தயக்கமின்றித்
தப்புக்கள் செயலா மென்னும்
தத்துவந்தான் ஆள்வோர்க்கு வேத மாகும்.
மதுரை—28-03-1985
Subscribe to:
Posts (Atom)