கல்லூரி வகுப்பறை
அழகப்பா
கல்லூரி
–முத்தமிழ் விழா—02—04—1981
கல்லூரிக்குள் நாங்களும் பேசுகின்றோம்.
வகுப்பறை
கல்லூரி
வகுப்பறைநான்; கல்வி தருகின்ற
எல்லா
வகுப்பறைக்கும் ஏற்ற முடையவன்நான்;
பாத்திகட்டி
நீர்பாய்ச்சிப் பண்பென்ற அடியுரங்கள்
சேர்த்து
வளர்த்தபயிர் சிரிக்கும் பெருங்கழனி;
கண்ணாக
வளர்த்துக் கருத்தோடு பார்த்தகொடி
வண்ண
மலரினங்கள் வாரித் தருந்தோட்டம்;
சொன்னால்
புரியாத சிறுபிஞ்சு நெஞ்சங்கள்
எண்ணத்
துணிகின்ற இளம்பருவ ஆடுகளம்;
கட்டுக்குள்
ளடங்காத முரட்டுக் காளைகளைக்
கட்டிவைத்துத்
தீனிதரக் கட்டிவைத்த ஒருதொழுவம்;
ஆசிரிய
வள்ளல்கள் அருங்கல்வி எனும்பொருளைக்
கூசாமல்
அள்ளிக் கொடுக்கின்ற நன்முற்றம்;
இந்நாட்டு
மன்னர்தம் இதயத்தைப் புடம்போட்டுப்
பொன்னாக
மாற்றவெனப் போட்ட உலைக்களம்.
என்பெருமை
தனையெண்ணி இதயம் நிமிர்கிறது;
உண்மை
நிலைகண்டென் தலைசற்றுக் குனிகிறது.
வகுப்பறை
இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக்
காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
ஆசிரியர் நடத்தும் அரிய பாடங்கள்
பேசுகின்ற
மாணவர்தம் பேச்சில் கரைகிறது;
ஆசிரியர்
பேசுகிறார்; மாணவரும் பேசுகிறார்;
பேசுகிற
இருபேச்சும் பின்னிக் குழைகிறது.
வாரித்
தரப்பொருளை வகைவகையாய் எடுத்துவந்த
பேரா சிரியரோ பெருமயக்கங் கொள்ளுகிறார்.
பேசாதீர்! என்றுசொல்லிப் புலம்பி ஓய்ந்துவிட்டுப்
பேசாமல்
தவிக்கின்றார் பெரும்புலமைப் பேராசான்.
மணியடித்தால்
விடுதலை;
இருவருமே நினைக்கின்றார்.
இனிய எதிர்காலச் சமுதாயம் மலர்கிறது.
வகுப்பறை
இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக்
காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
சிந்தனையாளர்; பேரறிஞர்; முதிர்புலவர்; எல்லோரும்
வந்துவந்து
கருத்தை வாரி வழங்குகின்றார்;
சிந்தும்
மணிகளையார் சீந்திப் பார்க்கின்றார்?
வந்த
உடனேயே வழிபார்த்துத் துடிக்கின்றார்.
இருகாதும்
அங்கே இருக்காது; அப்படியே
இருந்தாலும்
திறக்காது; இருபுறமும் முடிமறைக்கும்.
திறந்துள்ள
காதுவழிச் செல்பவையோ நேர்கோட்டில்
விரைந்து
வெளியாகிக் காற்றோடு கலந்துவிடும்;
கேளாத
காதுக்குத் தினம்சொல்லிச் சலிக்கின்ற
மேலான
ஆசிரியர் மேன்மைகண்டு போற்றுகிறேன்;
வகுப்பறை
இருக்கின்றேன்; வகுப்பும் நடக்கிறது;
வகுப்பறைக்
காட்சிகளோ வயிற்றெரிச்சல் தருகிறது.
_________ _________ ________