நீர் பேசுகிறது
நீர் பேசுகிறது
நானின்றேல் நீரில்லை; உம்மு டம்பில்
நேர்பாதிக் கதிகம்நான்; ஆட்ட மெல்லாம்
நானிருக்கும் வரையேதான்; உடம்பி லுள்ள
நீர்வற்றிப் போய்விட்டால் அழகா யுள்ள
மேனிவற்றிப் போய்விடுமே ! உயிரு மந்த
மேலுலகம் போய்விடுமே ! ஆகை யாலே
நானிருக்கும் போதேநீர் செய்ய வேண்டும்
நல்லசெயல் அத்துணையும் செய்து தீர்ப்பீர் !
பட்டெடுக்க வேண்டுமென்று படுத்து கின்ற
பாவைகண்ணில் பனித்துளிபோல் உருவெ டுப்பேன்;
பட்டெடுக்கக் கணவனவன் மறுத்து விட்டால்
பாய்ந்துவீழ்வேன் அவள்கண்ணில் அருவி யென்ன.
பட்டெடுத்து விட்டாலோ கடனைத் தீர்க்கப்
படுகின்ற அவன்கண்ணில் ரத்த மாவேன்;
இட்டஅடி நோகவரு பெண்க ளுக்கே
இணையற்ற ஆயுதமாம் கண்ணீ ராவேன்.
சிவனென்னைத் தலைமீது தாங்கிக் கொண்டான்;
திருமாலோ என்மடியில் பள்ளி கொண்டான்;
சிவகுமரன் அறுமுகமாய் என்னி டந்தான்
தோன்றிட்டான்; கணபதியோ துணையைத் தேடிச்
சிவனேயென் றென்கரையில் அமர்ந்து விட்டான்;
திருமகளும் கலைமகளும் பிரம்மா என்னும்
அவனுமென்றன் மீதலர்ந்த மலர்கள் மேல்தான்;
அருந்தெய்வ மத்துணையும் அடக்கம் என்னுள். தென்னாடு சிவனாடு ஆத லாலே. செழிப்பெல்லாம் அவன்பொறுப்பே என்று நானும் இந்நாட்டை ஒதுக்கிவிட்டேன்; ஏதோ பேர்க்காய் இங்கேயும் ஆறிப்போய்க் கிடக்கின் றேன்நான் எந்நாளும் இங்கென்மேல் மணல்தான் ஓடும்; எப்போதோ தவறிப்போய் வெள்ளம் கூடும்; எந்நாளும் வற்றாத என்னோட் டத்தைஇங்குள்ளோர் பார்த்தறியார்; அறிவேன் நதேர்னடக்க ஆனாலும் தமிழ்நாட்டார் கெட்டிக் காரர்; அருஞ்சுவையைத் தமிழ்மொழியிற் காணும் மேலோர்; தேன்போலப் பால்போலத் துளியாய் ஓடும் . திறங்கண்டே இங்குள்ள நதிகட் கெல்லாம் தேனாறு பாலாறு எனப்பேர் வைத்தார்; திகழ்மதுரை நகரளந்தே ஓடும் ஆற்றில் தானாகக் கைவைக்கும் அளவே தண்ணீர் தவழ்வதனால் வைகையெனத் தெரிந்து சொன்னார். பார்நடக்க வேண்டுமெனில், நாட்டில் தீய பசிநடக்க வேண்டுமெனில், மக்கள் வாழும் ஊர்நடக்க வேண்டுமெனில்,உடலி லெல்லாம் உயிர் நடக்க வேண்டுமெனில், ஆட்சி யென்னும் தேர்நடக்க வேண்டுமெனில், வாழ்க்கை தன்னில் திருநடக்க வேண்டுமெனில், வான்ப ரப்பில் கார்நடக்க வேண்டும்; பின் ஆறாய் என்றன் கதிநடக்க வேண்டுமிது மாறாத் தேவை.
No comments:
Post a Comment