Tuesday, December 15, 2015

கனவுப் பூ



                                    கனவுப் பூ

அமைதியினைத் தொலைத்துவிட்டோம்; பொறுப்பில் லாமல்
   ஆற்றினிலே போட்டுவிட்டுக் குளத்தில் தேடி
அமைதியினைக் காணாமல் நொறுங்கு கின்றோம்;
   அகத்துளேஓர் இருட்குகையில் கிடந்த பூதம்
நமதுள்ளம் கிழித்தெறிந்தே ஆர்ப்ப ரித்து
   நடுநடுங்க வைப்பதனைக் காணு கின்றோம்.
அமைதியெங்கே எனத்தேடி வாடு கின்றோம்;
   அதுஎங்கே?  உள்ளேயா?  வெளியி  லேயா?

அறிவியலின் கொடுமுடியில் நின்று கொண்டே
   அமைதியில்லை என்றழுதால், வளர்ந்து விட்ட
அறிவியலின் கோளாறா ? அனுப விக்கும்
   ஆத்மாவின் கோளாறா ? இந்த மண்ணில்
அறிவியல்தான் ஆன்மீகம் புறக்க ணித்தே
   அடிவைத்த கோளாறே நமது வானில்
பொறிபறக்கப் போர்வெடித்துப் பழைய காலப்
   போர்ச்சரங்கள் நினைவுறுத்தும் கார ணமாம்.

நெஞ்சுக்குள் பூகம்பம் வெடிக்கும் போது
   நினைவுக்குள் சுழற்காற்றே அடிக்கும் போது
பஞ்சுக்குள் நெருப்பைப்போல் ஏற்றத் தாழ்வு
   பற்றிக்கொண் டபலைகளை எரிக்கும் போது
மிஞ்சிநிற்கும் செல்வத்தால் ஏழை மக்கள்
   மிதிபட்டுத் தெருவெல்லாம் கதறும் போது
கிஞ்சித்தும் தோன்றிடுமா அமைதி? அந்தக்
   கனவுப்பூ எரிமலையின் நடுவா பூக்கும்?

உலகமெலாம் ஒருகுடும்பம் என்ற எண்ணம்
   உள்ளத்தில் கொண்டிடுவோம்; வரைப டத்தில்
உலகத்தைப் பிரிக்கின்ற கோட்டை யெல்லாம்
   ஒட்டுமொத்த மாயழிப்போம்; உடன்பி றந்தே
கலகத்தை வளர்க்கின்றோர் நெஞ்சுக் குள்ளே
   கருணைவெள்ளம் பாய்ச்சிடுவோம்; உயிர்கள் வாழும்
உலகத்தை ஒருகூடாய்க் கண்டெல் லோரும்
   ஒருகூட்டுப் பறவைகளாய் உறவு கொள்வோம்.
        ___________   ___________   ____________

        ( English Tranlation by The Poet himself )

                 Dream Flower

1. Where the Peace is ?
  We have lost our Peace with dire wrecklessness ;
  We search for it in nearby pond
  dropping it in a remote running river;
  We feel shattered not seeing the peace.
  We see a demon from within the dark cave of our mind
  Which makes us shiver with fear;
  We search and search ;
  Where the peace is ?

2. Standing on the highest peak of Scientific Advancement
  We cry for peace ;
  Where the fault is ?
  Is it in Science ? or in consuming minds, Aathma ?
  It is nothing but our advancing steps towards Science,
  Totally neglecting Spirituality.
  That makes us witness the Bombs and Missiles
  Fiercefully roaming over our heads.

3. When an Earth Quake breaks and tremors
  From within ourselves,
  When a Typhoon rises from within our minds ,
  When prevailing horrorful disparity among the
  Living people fires downtrodden ,
  When the unbound riches kick the penniless and
  When they cry all over the streets ,
  Can we find out peace ?
  Can the Dream Flower blossom
  In the tip of the firing Volcano ?

4. Let us decide that all the world is one family.
  Let us erase the dividing lines totally ;
  Let us irrigate the harming minds
  With the floods of charity .
  Let us see the World as a nest and
  Let us have the deep relations as the birds
  Living in a single nest , harmoniously.
              ___  ___
    
 


No comments:

Post a Comment