ரோஜா
மலரே !
ரோஜா மலரே மலர்வாயோ—அந்த
ராஜா இலையெனத் தளர்வாயோ ?
சிரிப்பிலே அவனிதழ்
நடமிருக்கும்—தூய
சிந்தனை ரேகையின்
தடமிருக்கும்
நெருப்பிலே அவன்நிறம்
சிரித்திருக்கும்—அந்த
நேசனே இலையென
நினைப்பாயோ ?
கிண்கிணிச் சிரிப்பொலி
நெஞ்சிருக்கும்—சின்னக்
குழந்தையைக் கனிவுடன்
கொஞ்சிநிற்கும்
வெண்மதி மீன்களை
அணைத்திருக்கும்—அந்த
வல்லவன் இலையென
மடிவாயோ ?
இமயமும் குமரியும்
எதிரொலிக்கும்—அந்த
இன்மகன் சாம்பலில்
கதிர்விளைக்கும்
அமைதி என்றிடில்
அவனிருக்கும்—அந்த
அன்பனே இலையென
அழிவாயோ ?
( காங்கிரஸ் நூற்றாண்டு விழாவின்போது திரு.ப.சி.
அவர்கள் விரும்பி
வெளியிட்ட பாடல் தொகுதி ஒலிநாடாவில் இடம்பெற்ற
என் பாடல் இது.
இசை;-திரு. வீரமணி பாடியவர்;--திருமதி. வித்யா ( உளுந்தூர்பேட்டை சண்முகம்
மகள் எனக் கருதுகிறேன். )
No comments:
Post a Comment